அடுத்தடுத்த வாய்ப்புகள் காத்திருக்கிறது: தோல்வி அடைந்த மாணவர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல்..!

திங்கள், 8 மே 2023 (13:56 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 6% மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி இந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆறுதல் கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது
 
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதற்காக மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகளில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. மாணவச்செல்வங்கள் அனைவரது எதிர்காலமும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்