சூர்யா போல தம்பி விஜய்யும் சமூக பிரச்சினைகளை பேசணும்! – சீமான் வலியுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:33 IST)
நடிகர் சூர்யா போல விஜய்யும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய் பீம். இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து இந்த படம் பேசியுள்ள நிலையில் பல தரப்பிலிருந்தும் இந்த படத்திற்கு ஆதரவும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “நடிகர் சூர்யா போல தம்பி விஜய்யும் சமூக பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும். அவர் திடீரென பேசி பின்னர் பயப்படுகிறார். ஆனால் அவர் இருக்கும் உயரம் அவருக்கே தெரியாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்