சமீபத்தில் இயக்குநர் ஷங்கருக்கு எந்திரன் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் இணையதளத்தில் பரவிய நிலையில், இது பொய்யான செய்தி என இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை உலகளவில் உயர்த்திய பெருமை இயக்குநர் ஷங்கருக்கு உண்டு. அவரது ஜெண்டில்மேன் படம் தொடங்கி இருஆண்டுகளுக்கு முன் வெளியான எந்திரன் 2.0 படம் வரைஎல்லாமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.
இந்நிலையில் எந்திரன் படக் கதை திருட்டு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஷங்கருக்கு பிடிவாரண் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இது பொய்யான தகவல் என அவர் மறுத்துள்ள நிலையில் நீதிபதியும் இதை உறுதி செய்துள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு இனிய உதயம் எனும் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா என்ற கதை வெளிவந்தது. இதே கதை பின்னர் திக் திக்தீபிகா என்ர நாவலாக 2007 ஆம் ஆண்டு வந்து வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்காக இக்கதை திருடப்பட்டதாக எழுத்தாளர் தமிழ்நாடான வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு நீண்ட காலம் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை வழக்கில் ஆஜராகாமல் இருந்துவந்த இயக்குநர் ஷங்கருக்கு எந்திரன் கதைத் தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம்ன் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,. தற்போது ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன் அவர்கள் இன்று நீதிமன்றத்தை அணுகி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். எனக்கு எதிரான எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடிமாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்.
இணையதளத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுவதில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் என் குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் தேவையில்லான மனவுளைச்சலைக் கொடுத்துள்ளது. இதுபோன்ற பொய்யான செய்திகள் இனிப்பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்…எனத் தெரிவித்துள்ளார்.