இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:36 IST)
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி போகுமா என்ற கேள்வியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதிலளித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெற வில்லை என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் இன்று இது குறித்து பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்