மழை குறித்து இன்று அச்சப்பட தேவையில்லை; நார்வே வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2017 (10:35 IST)
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு சென்னையில்ல் வெள்ளம் ஏற்பட்டது போல் மீண்டும் வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் நார்வே வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தமிழகத்தில் மழை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய வானிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று பல இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் இருக்கும். இதனால் அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அதை சுற்றியுள்ள 21 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்