சென்னையில் 12 நாட்களுக்கு ஊரடங்கா? மாநகராட்சி விளக்கம்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:15 IST)
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
எனவே தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது 
 
இது குறித்து சென்னை மாநகராட்சியின் விளக்கமளிக்கையில் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் பொய்யான தகவல் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தகவல்கள் மட்டுமே உண்மை என்றும் இந்த பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தில் இப்போதைக்கு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றே கூறப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்