டெல்லியில் அறிவிக்கப்பட்டது முழு ஊரடங்கு! – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:59 IST)
டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் வார இறுதியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாளை இரவு 10 மணிக்கு தொடங்கி திங்கள் காலை 6 மணி வரைக்கும் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்