ரஜினியும் கமலும் அரசியலுக்கு லாயிக்கிலை: சொல்பவர் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (00:55 IST)
ரஜினியும், கமலும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ அரசியலுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில மாதங்களில் நடந்து வரும் சம்பவங்கள் தெரிவித்து வரும் நிலையில் இருவரது அரசியல் வருகையை தமிழக மக்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய வசந்தகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ரஜினி, கமல் இருவரும் சினிமாவைத் தவிர அரசியலுக்கு வரவே முடியாது. கீழ்மட்ட அரசியலும், கீழ்மட்ட மக்களின் மனநிலையும் துளிகூட அவர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட அவர்கள் எப்படி அரசியலுக்கு வரமுடியும்? என்று கூறியுள்ளார்.
 
மேலும் உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-க்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க. அரசால் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது. ஏனென்றால், ஒரு வார்டில் கூட அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மை என்று கூறினார்,.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்