நடிகர் கமல்ஹாசன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட முழுநேர அரசியலில் ஈடுபட்டுவிட்டார். கமல்ஹாசனின் டுவிட்டர் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிடும்போதெல்லாம், அரசியல்வாதிகளுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் கமல் டுவிட்டர் அரசியலை மட்டும் செய்யாமல் களத்தில் இறங்கினால்தான் அரசியல் என்றால் என்ன என்பது தெரியவரும் என்று பலர் விமர்சனம் செய்தனர்.