அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலை ஆவேசம்..!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (10:04 IST)
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தனது பாஜக தமிழக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது என்பதும் இருப்பினும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்னுடைய பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண கட்சி தொண்டராக இருந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
 
தனியாக போட்டியிட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை என்றும் அவர் அறிவித்தார். நிர்வாகிகள் மத்தியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்