இதையடுத்து, முன்னாள் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவை சிபிஐ காவலில் விசாரிக்க வேண்டுமென சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, சொத்துக்குவிப்பு, போலி ஆவணம் தயாரித்தல், அவற்றை ஏமாற்றும் நோக்கத்திற்குப் பயன்படுத்துதல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.