யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை இல்லை: மருத்துவத் துறையினர் தகவல்

Mahendran
வெள்ளி, 31 மே 2024 (15:28 IST)
குழந்தையின் பாலினத்தை வீடியோவாக யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில் இந்த விவகாரத்தில் இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு அதை விழாவாக கொண்டாடிய சர்ச்சை வீடியோ குறித்து மருத்துவத் துறையிடம் விளக்கம் அளித்த இர்பான், இதுகுறித்த விழிப்புணர்வு காணொலி வெளியிடுவதாக தெரிவித்ததாகவும் தெரிகிறது.
 
மேலும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக  கருவில் இருக்கும் குழந்தை ஆணா. பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரிய நிலையிலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்