ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ராகுல் காந்தி, சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இதில் கலந்து கொண்டு, நான்காவது முறையாக ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் சோரனை நேரில் வாழ்த்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.