வெள்ள பாதிப்பை ஆய்வு செல்கிறார் நிர்மலா சீதாராமன்: தூத்துக்குடி வருகை எப்போது?

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (11:13 IST)
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென் மாவட்ட மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில்  மத்திய குழு சமீபத்தில் தென் மாவட்டம் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்டது

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுதினம் தூத்துக்குடி சென்று வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்ல இருப்பதாகவும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் வீடுகள் ஆகியவற்றை பார்வையிட உள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்