வெள்ளத்தால் தூத்துக்குடி மருத்துவமனைக்கு பெரும் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சனி, 23 டிசம்பர் 2023 (11:21 IST)
பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
 பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், 4 தென் மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், 261 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

மேலும் 4 மாவட்டங்களில் 315 சுகாதார நிலையங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது என்றும், கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையை  விரைவில் சமர்ப்பிப்பார்கள் என்றும், பாதிப்படைந்துள்ள மருத்துவமனை மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்,

மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து தூத்துக்குடியில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை 50 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்