சிறையில் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தா? வழக்கறிஞர் பகீர் தகவல்

வியாழன், 19 ஏப்ரல் 2018 (08:51 IST)
சிறையில் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சிறை அதிகாரிகள் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்
 
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை நேற்று மதுரை மத்திய சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணி, 'சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலாதேவி தெரிவித்ததாகவும், இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் தான் தெரிவித்துள்ளதாகவும், சிறை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் நீதிமன்றம் மூலம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க கேட்போம் என்றும் அவர் கூறினார்
 
மேலும் கல்லூரிகளுக்கு இடையே உள்ள தொழில் போட்டியால் தான் இந்த பிரச்சனையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆடியோவில் உள்ளது தனது குரல் தான் என்று ஒப்புக்கொண்டுள்ள நிர்மலாதேவி அதில் சில வார்த்தைகள் வெட்டப்பட்டும், ஒட்டப்பட்டும் உள்ளதாக கூறியதாவும் வழக்கறிஞர் பாலசுப்பிரமணி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்