தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக நிர்மலாதேவி விவகாரமும், கவர்னர் கன்னத்தை தட்டிய விவகாரமும் சேர்ந்துவிட்டது. நிர்மலாதேவி விவகாரம் மற்றும் கன்னத்தை தட்டிய விவகாரம் ஆகிய்வற்றை வைத்து உடனே கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் அடுத்த போராட்டத்தை தொடங்கிவிட்டன
இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால், நாளை டெல்லி செல்கிறார். தமிழகத்தில் தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செல்லும் ஆளுனர் திரும்பி வருவாரா? அல்லது பதவியை விலகுவாரா? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் விவாதம் செய்து கொண்டு வருகின்றனர்.