உறுதியானது: சற்று நேரத்தில் திமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன்!

வெள்ளி, 28 ஜூன் 2019 (11:51 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளார் வி.பி.கலைராஜன்.
 
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மன கசப்பால் அமமுகவில் இருந்து விரைவில் விலக்கப்பட உள்ள தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைவார் என வி.பி.கலைராஜன் பேட்டியளித்துள்ளார். 
 
ஏற்கனவே அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் செந்தில் பாலாஜி மற்றும் வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இவர்கள் வரிசையில் தங்க தமிழ்ச்செல்வனும் இணைய உள்ளார். 
வி.பி.கலைராஜன் இது குறித்து கூறியதாவது, திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் நடந்து முடிந்த பின்னர் அறிவாளயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவார். அவருடைய வருகை வரவேற்கதக்கது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்