பின்வாங்கும் திமுக? அதிமுகவை எதிர்த்து எதுவும் செய்யாதது ஏன்?

வெள்ளி, 28 ஜூன் 2019 (11:17 IST)
சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது. 
 
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், சட்டசபையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதிலும் உறுதியாக இருந்த நிலையில், தற்போது இவை அனைத்தையும் கைவிட்டுள்ளார். 
 
ஆம், சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம். அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை என ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
அதாவது, இது போன்று தேவையற்றதை செய்வதை விடுத்து சட்டசபை நடவடிக்கைகள் மூலம் வெற்றி முகத்தை தக்க வைக்க திமுக சிந்திக்கிறதாம். சட்டசபையில் முழு நேரம் இருந்து மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி தரும் முடிவோடு திமுக இருக்கிறதாம். 
 
மேலும், சட்டசபையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ப்து குறித்து தற்போது நடந்து வரும் திமுக எம்எல்ஏ கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்