தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: பீதி வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (13:24 IST)
தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்து சில நாட்களாக அதீத காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இது ஒருவகையான புதிய வைரஸ் காய்ச்சல் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது 
 
தற்போது தான் கொரோனா வைரஸ் என்ற மிகப்பெரிய பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டுள்ள நிலையில் மீண்டும் புதிதாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு உடல் சோர்வுடன் கூடிய காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்