ஆவடி - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புதிய மின்சார ரயில்.. தேதி அறிவிப்பு..!

Mahendran

செவ்வாய், 5 நவம்பர் 2024 (10:27 IST)
ஆவடி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஏற்கனவே சில ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சென்னையில் மின்சார ரயில் சேவையை சுமார் 10 லட்சம் பேர் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த சேவையை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புதிய மின்சார ரயில் நவம்பர் 6 ஆம் தேதி முதல், அதாவது நாளை முதல் இயக்கப்பட இருப்பதாகவும், இந்த ரயில் மாலை 6:10 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு 6:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இரு மார்க்கமாகவும் ரயில் இயக்கப்படுகிறது என்றும், இதுவரை இந்த ரயிலில் ஒன்பது பெட்டிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவண்ணாமலையிலிருந்து வரும் இந்த ரயில் சென்னை கடற்கரை வந்தவுடன் அங்கிருந்து தாம்பரம் வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாகவும், இந்த நீட்டிப்பு நவம்பர் 7 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்