திருப்பூர் மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகள்

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (21:39 IST)
கோவையை அடுத்து திருப்பூர் மாவட்டத்திலும் கொரொனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு நாளை (05-08- 21) முதல்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது.

இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில்  தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்றுப் பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அங்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது திருப்பூர் மாவட்டத்திலும் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், வார இறுதியில் வணிக வளாகங்கல் இயங்கக்கூடாது எனவும், கேரளாவில் இருந்து வருவோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திவதற்கான சான்றிதழ். கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை  மணிவரை மட்டுமே செயல்படவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பால் மருத்தகம் தவிர மீதி அனைத்துக் கடைகளும் காலை  6 மணி முதல்5 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பால், மருத்துகள், மளிகைம், காய்கறி, இறைச்சிக் கடைகள், மீன்கடைகள் தவிர மற்றக் கடைகள் சூப்பர் மார்க்கட்டுகள் அனைத்தும் சனி,ஞாயிறு கிழமைகளில் செயல்பட அனுமதி இல்லை. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம் , உணவகங்களில் மாலை 5 மணிவரை அனுமதி அதில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே இயங்கலாம் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்