டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் சிஸ்டம்… மாலை 4 மணிவரை மட்டுமே வழங்கப்படுமாம்!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:00 IST)
கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் டோக்கன் பெற்று வாங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது டாஸ்மாக் கடைகளுக்கும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே திறப்பு  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த லாக்டவுனின் போது அறிவிக்கப்பட்ட டோக்கன் சிஸ்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் டோக்கன் வரிசை எண்ணுக்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கப்படுமாம்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்