6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:27 IST)
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கனமழை காரணமாக விருதுநகர் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்