நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தேர்ச்சி விகிதம் 56.3 சதவீதம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் அவர்களில் சுமார் பாதி பேர் மட்டுமே அதாவது 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தின் தேர்ச்சி பெற்றும் 51.3 சதவீதம் என அறிவிக்கப்பட்டு உள்ளது
இதில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் தேசிய அளவில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்த இருவர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது