நீட் தேர்வு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் மாணவி!
வியாழன், 8 செப்டம்பர் 2022 (07:45 IST)
நீட் தேர்வு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் மாணவி!
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தேசிய அளவில் ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளார்.
கடந்த ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப் பட்ட நிலையில் இந்த தேர்வை 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதினர்
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 715 மதிப்பெண்கள் பெற்று ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்\
இரண்டாவது இடத்தை டெல்லியை சேர்ந்த மாணவரும் மூன்றாவது இடத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
நீட் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தேர்ச்சி விகிதம் 56.3 சதவீதம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது