இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளிவருமா? தடை கோரி வழக்கு

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:24 IST)
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்களும்,  தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்களும் எழுதினர்.
 
இந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என  மத்திய மனிதவள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த தேர்வின் முடிவை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நீட் தேர்வின் வினாத்தாள்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதில் ஏற்பட்ட தவறால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த தேர்வின் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிற்பகல் விசாரணை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5 அதாவது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் அனில் ஸ்வரூப் இன்று தனது டடுவிட்டர் பக்கத்தில், நீட் தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்