சிறந்த ஷூட்டர் விருது: விஜய் விருது விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய பார்த்திபன்

திங்கள், 4 ஜூன் 2018 (08:24 IST)
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று விஜய் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் விருது விஜய்சேதுபதிக்கும், சிறந்த நடிகை விருது நயன்தாராவுக்கும் சிறந்த படம் விருது மெர்சல் படத்திற்கும் கிடைத்தது.
 
இந்த நிலையில் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.பார்த்திபன் பேசிய போது 'இத்தனை விருதுகள் கொடுத்த விஜய் விருதுகளில் சிறந்த ஷூட்டர் விருதை தூத்துகுடியில் பொதுமக்களை சுட்டு கொன்றவரக்ளுக்கும் கொடுத்திருக்கலாம். நான் சமூக விரோதிகளை சொல்லவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்
 
இந்த விருது விழாவில் தூத்துகுடி பிரச்சனை குறித்து பேசிய ஒரே நபர் பார்த்திபன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் இந்த பேச்சுக்கு ஃபேஸ்புக், டுவிட்டரில் வரவேற்பும், எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது. தூத்துகுடி பிரச்சனை குறித்து இத்தனை நாள் பேசாத பார்த்திபன் இன்று மட்டும் பேசியது முழுக்க முழுக்க விளம்பரத்திற்காகவே என்று பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்