வால்பாறையில் 5 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (20:15 IST)
சோலையார் ஆர்ச் அருகே ஆற்றில் இறங்கி குளித்த 5  மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது வால்பாறை.

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான வால்பாறைக்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கோவை, கிணத்துக்கிடவு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் இங்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

சோலையார் ஆர்ச் அருகே ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். ஆழம் அதிகம் உள்ள பகுதிக்குச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் முழ்கிய 5 பேர் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்