ஒரே நாடு, ஒரு மாணவர் அடையாள அட்டை அறிமுகம்.. மத்திய அரசு திட்டம்..!

திங்கள், 16 அக்டோபர் 2023 (13:20 IST)
நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு ஒரே அடையாள அட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று  இந்தியா முழுக்க இந்த  நடைமுறையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு ஒரே அடையாள அட்டை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மாணவர்களின் முன்னேற்றம் செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள அட்டை எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆதார் அட்டை போலவே மாணவர்களின் முன்னேற்றங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்றும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்