பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

Siva

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (16:22 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி புறவழி சாலை முதல் போரூர் வரையிலான வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்குவதற்கான பாதுகாப்பு சோதனைகள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்டிஎஸ்ஓ அமைப்பால் நடத்தப்பட்ட இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனையின்போது, ரயில் 90 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு, அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனையில், ரயிலின் இயக்கத் தரம், பாதுகாப்பு அமைப்புகள், சிக்னல் முறை மற்றும் தண்டவாளத்தின் உறுதித்தன்மை ஆகியவை சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டது.
 
இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, பூந்தமல்லிக்கும் போரூருக்கும் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயண நேரம் கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்