நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை திடீர் சரிவு: என்ன காரணம்?

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (07:46 IST)
மருத்துவ நுழைவு படிப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவ மாணவிகள் அதிக அளவில் எழுதி வந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிவு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த சரிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் பெறுவதற்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன 
 
கடந்த ஆண்டு நீட் தேர்வை 1,34,714 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில் இந்த ஆண்டு 1,17,990 பேர் விண்ணப்பிது உள்ளனர். ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த ஆண்டு 57,755 பேர்களும் இந்த ஆண்டு 61,892 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் பீகார், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகளவில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பயம், இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் ஆகியவையே தமிழகத்தில் நீட் தேர்வு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்