இப்ப நீட் தேர்வு ரொம்ப அவசியமா? – ஸ்வீடனிலிருந்து வந்த எதிர்ப்பு!

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (14:03 IST)
கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் நீட் உள்ளிட்ட தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் தேர்வை ஒத்தி வைக்க வலியுறுத்தி பதிவிட்டுள்ளார் ஸ்வீடன் சிறுமி க்ரேட்டா தன்பெர்க்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 30 லட்சத்தை தாண்டியுள்ளன. இன்னமும் கொரோனாவிற்கு சரியான மருந்து கண்டுபிடிக்காத சூழலில் இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என இந்தியாவில் உள்ள பல மாநில மற்றும் தேசிய கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்வீடன் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சிறுமி க்ரேட்டா தன்பெர்க் “இதுபோன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நேரத்தில் மாணவர்களை நீட் தேர்வு எழுத சொல்வது நியாயமற்றது. ஏற்கனவே லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுகளை ஒத்தி வைக்கும் செயல்பாட்டிற்கே நான் ஆதரவு தருகிறேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்