அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான்: பிரபல கிரிக்கெட் வீரர் ஆரூடம்

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (11:46 IST)
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருப்பதால் அடுத்த பிரதமர் மீண்டும் மோடியா? அல்லது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. மேலும் மூன்றாம் அணியில் இருந்து மம்தா பானர்ஜி அல்லது மாயாவதி ஆகிய இருவரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் `காங்கிரஸ் தலைமையில், மதச்சார்பற்ற கட்சிகள் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் என்றும் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார்.
 
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் பாஜக கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் எம்பியாக இருந்த சித்து பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு சுற்றுலா துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சித்து, ' `மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும், பா.ஜ.க-வை வீழ்த்த, காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் என்றும் கூறினார். மேலும் நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்