இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர் அடித்துக் கொலை !

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (10:56 IST)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் (26). இவர் விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் அவர் பங்கிற்குச் சென்றுள்ளார். அப்போதும் இயற்கை உபாதை கழிப்பதற்காக செ.புதூர் எல்லைகுட்பட்ட மலைப்பகுதியில் உள்ள வயலில் வேலை செய்து வந்த பெண் மணி ஒருவர்ன், சக்திவேல் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள வருவதாக  நினைத்து கூச்சலிட்டார் என தெரிகிறது.
 
அங்குள்ளவர்கள் வந்து சக்திவேலை அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலை மீட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால், செல்லும்வழியில் மயங்கி விழுந்து சக்திவேல்  உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்