போலிஸ் உதவியோடு நடக்கிறதா லாட்டரி விற்பனை ? -5 பேர் மரணத்துக்குப் பிறகாவது மாறுமா நிலைமை ?

சனி, 14 டிசம்பர் 2019 (08:28 IST)
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் போலிஸார் உதவியோடுதான் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரை என்ற பகுதியை சேர்ந்த அருள் தாலி செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும்,  பிரியதர்ஷினி, யுவஷ்டி, பாரதி ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் லாட்டரி சீட்டு பழக்கம் காரணமாக கடனாளியான அருள் கடனை அடைக்க வழி தெரியாமல் திண்டாடினார். ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்று கடனில் பெரும்பகுதியை அடைத்த போதிலும் முழு கடனையும் அடைக்க முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்து 3 நம்பர் லாட்டரி சீட்டை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிலும் அவருக்கு கடன் அதிகமானதே தவிர பரிசு கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 200 வழக்குகள் பதியப்பட்டு 155 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் 291 பேர் லாட்டரி விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலிஸ் துணையின்றி இவ்வளவு பெரிய அளவில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யமுடியாது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி இரண்டு போலிஸார் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்