திறந்தவெளி பள்ளிக் கல்வியில் தமிழ்வழிக் கல்வி அறிமுகம்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (06:20 IST)
தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.


 

 
தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் வசதிக்காக இந்த ஆண்டு முதல் தமிழில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகஅறிவியல், பொருளாதாரம், தொழிற் கல்வி, மனையியல், உளவியல், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், கணக்கியல், ஓவியம், கணிணி தட்டச்சர் ஆகிய பாடங்களில் ஏதேனும் நான்கு பாடங்களை தேர்வு செய்து அத்துடன் ஒன்று அல்லது இரண்டு மொழிகளை கற்பதன் மூலம் பத்தாம் வகுப்பிற்கான சான்றிதழை பெறலாம்.
 
இது தவிர, ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி ஆணையத்தின் கீழ் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண்களை தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனத்துடன் இணைத்து ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 
2016­17-ம் ஆண்டுக்கான தமிழ்வழிக் கல்வியில் சேர்வதற்கு தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தின் இணையதளமான www.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்