புதுச்சேரியில் ஆட்சியே போனாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.
நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களில் ஆங்காங்கே போலீஸாருக்கும் போராட்டகாரகளுக்கும் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொருத்த வரை திமுக சார்பில் வரும் 23 ஆம் தேதி குடியுரிமையை எதிர்த்து பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர். மேலும் மாணவர்களும் நடிகர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதில் தற்போதைய செய்தி என்னெவெனில், புதுச்சேரியில் ஆட்சியே போனாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு புதுச்சேரி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தில் மாநில அரசுகள் இணைக்கப்படவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள் நாடு முழுவதற்கும் பொருந்தும் என்பதால் இதை பின்பற்றுவதை மாநில அரசுகள் மறுக்க முடியாது என்றும் முன்னறே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.