விக்கிரவாண்டி, நாங்குநேரி மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்!

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (06:36 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சற்று முன்னர் இரு தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
 
இன்று காலை 7 மணிக்கு இரண்டு தொகுதிகளிலும் வாக்கு பதிவு தொடங்குவதை அடுத்து பரிசோதனைக்காக இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர் 
 
இதனையடுத்து இந்த தொகுதியில் சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாதிரி வாக்குப்பதிவின்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனே சரிசெய்ய தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
 
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க தற்போது மழையை பொருட்படுத்தாமல் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வாக்களிக்கும் இடங்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வந்த 
 
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்