திருமணமான நான்கே மாதங்களில் மனைவி, கணவர் அடுத்தடுத்து தற்கொலை: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (18:32 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சேர்ந்த அன்பு என்பவருக்கும் லோகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கையை பெரும் கனவுடன் வாழ புகுந்த வீட்டுக்கு வந்த லோகேஸ்வரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கணவர் அன்பு சந்தேகப்படுவது, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது ஆகியவற்றால் மனமுடைந்தார் லோகேஸ்வரி
 
இதனால் மனமுடைந்த லோகேஸ்வரி தனது தாயார் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து லோகேஸ்வரி பெற்றோர் அன்பு மீது போலீஸ் காவல் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் லோகேஸ்வரியை அன்பு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் தங்களது மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது 
 
இதனையடுத்து போலீசார் அன்புவை விசாரிக்க அவரை தேடி வந்த நிலையில் தலைமறைவான அன்பு, ஆந்திராவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
 
திருமணமான நான்கு மாதங்களில் மனைவி மட்டும் கணவர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஒரு சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்