தம்பிகளா! பெட்டி படுக்கைய கட்டுங்கடா; கைலாசாவுக்கு கிளம்பும் சீமான்...

புதன், 18 டிசம்பர் 2019 (14:13 IST)
குடியுரிமை இல்லையென்றால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என சீமான் ஜாலியாக பேசியுள்ளார். 
 
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர்   போராடி வருகின்றனர்.
 
தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது... 
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை. நாங்கள் இந்திய குடியுரிமையற்றவனாக்கிவிட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன். எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருப்பதாகவும் அவர் காமெடியாக பேசினார். 
 
தனது ஆசிரமத்தில் சிறார்களை துன்புறுத்துவதாக நித்யானந்தா மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போலீஸார் நித்யானந்தாவை தேடிக் கொண்டிருக்க, அவரோ ஜாலியாக நாளுக்கு ஒரு வீடியோ வெளியிட்டு வருகிறார். கண்டிப்பாக கைலாசா என்ற தனிநாடு அமையும் என கூறியுள்ள நித்யானந்தாவுக்கு இப்போதே 40 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்