நித்தியானந்தாவிடம் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்...

சனி, 14 டிசம்பர் 2019 (20:06 IST)
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய மருத்துவர்  மனோஜ்குமார் மாயமானதால் அவரை கண்டுபிடித்து தரக் கோரி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார், தனது சகோதரி வனிதாவுடன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர் அவரைத் தேடிக் கொண்டு ஆசிரமத்துக்கு சென்றனர்.
 
ஆனால் ஊழியர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்ததாகத் தெரிகிறது. எனவே இதுகுறித்து மஜோஜ்குமாரின் பெற்றோர், தேனி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்து மனோஜ் மற்றும் வனிதா ஆகிய இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 
இதையடுத்து, மருத்துவப் பணிக்கு மனோஜ் திரும்பிய நிலையில், அவர், கடந்த மாதம் காணாமல் போனார். இந்நிலையில் அவரது பெற்றோர், மனோஜை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்