எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்! – வடிவேலு பாணியில் நித்யானந்தா!

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (14:40 IST)
போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா தன்னை தமிழர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறார்கள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா தினசரி முகநூல் வழியாக தனது சீடர்களுக்கு சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

தற்போது பேசிய அவர் ”முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பெரும் பிரச்சினை உண்டானால் அதிலிருந்து திசை திருப்ப என்னை பற்றிய பிரச்சினைகளை கிளப்புவார்கள். இப்போதெல்லாம் எனது செய்தி போல மீத நேரம்தான் மற்ற செய்திகளே போகின்றன.

நான்கு பேர் நான்கு விதமாய் பேசினால் அது நாடு. நான்கு பேர் நான்கு விதமாய் என்னைப்பற்றி பேசினால் அது தமிழ்நாடு. எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறேன் என்பதற்காக வடிவேலு காமெடியில் வருவது போல வைத்து செய்கிறார்கள்.

ஆனால் எவ்வளவு தடைகள் வந்தாலும் என் ஆன்மீக கடமைகளை நான் செய்து கொண்டே இருப்பேன். இதனால்தான் தமிழர்கள் என்னை தங்கள் ஆன்மீக தலைவராகவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்” என்று பேசியுள்ளார்.

இதற்கு நக்கலாக பதிலளித்துள்ள நெட்டிசன்கள் சிலர் ‘நாங்க எப்ப தலைவரா ஏத்துக்கிட்டோம்?” என்ற ரீதியிலான காமெடியான பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்