மகளுக்குக் கல்யாணம் – பரோல் கேட்கும் நளினி !

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (10:49 IST)
ராஜீவ் கொலைவழக்கில் சிக்கி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தன் மகள் திருமணத்திற்காக பரோல் அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இன்னமும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்காமல் மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில் சிறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில் தனது மகள் திருமணத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘ எனது தூக்குத்தண்டனை 2000 ஆம் ஆணு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின் சிறையில் இருக்கும் ஆயுள்கைதிகளில் 10 ஆண்டுக்கும் சிறை தண்டனை அனுபவித்தர்கள் 3700 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரோல் வழங்க விதிகள் உள்ளன. ஆனால் எனக்கு இதுவரை ஒருமுறைக் கூட பரோல் வழங்கப்படவில்லை. எனவே எனது மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு 6 மாத காலம் பரோல் வழங்கவேண்டும்’ என நளினி தெரிவித்துள்ளார்.

நளினியின் மகள் ஆரித்ரா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அங்கே ஆரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்