மோடிக்கு எதிரான தீர்ப்பு: ரபேல் ஆவணங்கள் மீது விசாரணைக்கு உத்தரவு

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (10:45 IST)
ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இப்போது வெளியாகும் இந்த தீர்ப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. 
 
பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி மீதும் பாஜக மீதும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக முன்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடு நடக்கவில்லை என, தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
ரபேல் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், ராணுவ அமைச்சக அலுவலகத்தில் இருந்து திருடி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற குற்றாச்சாட்டை முன்வைத்து மத்திய அரசு இதனை ஆவணத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது என மத்திய அரசு கோரிக்கை வைத்தது. 
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு மோடி அரசுக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆவணங்களை ஆதரங்களாக எடுத்துக்கொள்ளலாம் எனவும், ரபேல் ஊழல் வழக்கின் ஆவணங்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
தேர்தல் சமயத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு மோடிக்கு பாதகமாகவும், எதிர்கட்சிகளுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்