மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் ...தம்பதியினர் பலி...மகள் கவலைக்கிடம்...

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (21:37 IST)
கன்னியாகுமாரியில் ஆரல்வாய்மொழி என்ற பகுதியில் மர்மகும்பல் வீட்டுக்குள் புகுந்து தம்பதியினரை அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தோவாளை அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முத்து என்பவர் இவர் பூ வியாபாரம் ச்ய்து வந்தார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி மற்றும் பள்ளி செல்லும் ( 10 ஆம் வகுப்பு) மகள் உள்ளனர்.
 
முத்துவும் அவரது குடும்பத்தினரும் நேற்று இரவு வேளையின் போது வீட்டில் இருந்தனர். அப்பொது கையில் கத்தியுடம்ன் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து மூவரையும் கண்டந்துண்டமாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
 
இந்த தாக்குதலில் முத்துவின் மனைவி   சம்பவ இடத்திலேயே பலியானார். முத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மகள் ராமலட்சுமி தற்போது ஆயத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
 
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸார் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் தோவாளை மலை பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்