சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் மர்ம நபர் ஒருவர் காலணி வீசியதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீடு பனையூரில் உள்ளது. அதே பகுதியில் கட்சியின் தலைமை அலுவலகமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜய்யை காண்பதற்காக தினந்தோறும் கட்சித் தொண்டர்கள் வருகை தருகிறார்கள். இதனால், அவருடைய வீட்டின் முன் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் காலணி வீசியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, காலணி வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இருப்பினும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் நடந்த இந்த சம்பவம், அந்தக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.