என் ஆவி போலீஸாரை சும்மா விடாது…. ஆடியோவின் பேசிய சாமியார் தற்கொலை

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:52 IST)
நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகிலுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த சரவணன்.  இவர் சிவனடியாகராக ஊரில் இருந்துள்ளார்.

அதேசமயம் ஊரில் சாமியாராக பூஜைகளும் செய்து வந்துள்ளதாகவும், பேய்களை ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் போலீஸார் சரவனைத் தேடி வந்துள்ளனர். அப்போது போலீஸார் அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சரவணன் ஒரு ஆடியோ பதிவிட்டு, அதில் என்னைத் தாக்கிய அந்தோணி மைக்கெலை என் ஆவி சும்மா விடாது என்றும் போலீஸார் என்னைத் தாக்கியாதாலேயே நான் தற்கொலை செய்கிறேன் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரது குடும்பத்தினரும், ஊராரும் அவரைத் தேடியுள்ளனர், பின்னர் ஒரு காட்டுப்பகுதியில் அவர் விஷம் அருந்தித் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் இருவர் உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்