முழுமுதற் கடவுள், யானை முகத்தான், கடவுள்களில் முதன்மையாக வணங்கப்பட வேண்டியவர் என பல சிறப்புகளைப் பெற்றவர் விநாயகர்.
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட் களுக்குள் பெரும் தத்துவம் அடங்கி இருக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும்.
மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப் படுகிறது.