கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

Prasanth Karthick
சனி, 11 ஜனவரி 2025 (14:07 IST)

உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெற உள்ள கும்பமேளாவில் எல்லா சமயத்தினரும் கலந்து கொள்ளலாம் என்று பேசியுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அதேசமயம் மசூதிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

 

ப்ரயாக்ராஜில் 13ம் தேதி நடைபெற உள்ள கும்பமேளாவிற்காக இப்போதே பலரும் உத்தர பிரதேசம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பல மாநிலங்களில் இருந்தும் கும்பமேளாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கும்பமேளா நடைபெறும் இடத்தை வக்ஃப் வாரியம் உரிமை கோரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கும்பமேளா ஏற்பாடுகளை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது “ப்ரயாக்ராஜில் உள்ள இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கும்பமேளா நடந்து வருகிறது. இப்போது யாராவது இந்த நிலத்தை வக்ஃப் வாரியத்துடையது என்று சொன்னால் அது வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதா? நில மாஃபியாக்களுக்கு சொந்தமானதா என்றுதான் கேட்க வேண்டும்

 

மகா கும்பமேளாவில் அதன் நித்திய மரபுகளை மதிக்கிறவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தீங்கிழைக்க நினைப்பவர்கள் ஒதுங்கி விடுங்கள், இந்த நிலத்தை உரிமை கொண்டாடி ஆக்கிரமிக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்